செவ்வாய், 9 ஜூன், 2015

புடமிடு  தங்கமென புத்துணர்வை யூட்டி
தடம்புர  ளாவண்ணம் தக்கவழி காட்டி
நடந்துள தேர்வினில் ஞானமும் 

கூட்டி
கடந்துதான் செல்லுதே கண்ணிய மாதம்
கடமையைச் செய்ய கருணை வரவாய்
உடனிருந் தாயே உளம்நிறை தோழா
விடைபெறும் முன்னே விழிநீர் சுரந்து

மடைதிறக் கச்செய்த மாதமே சென்றுவா



 பட்டினித் தீசுட்ட பக்குவம் பெற்றதால்
 மட்டிலா பக்தி வளமுடன் கற்றதால்
 கொட்டிடும் கண்ணீரும் கோபம் கழுவியதே
 கட்டியே காத்திட்டக் கட்டுப்பா(டு) நோன்புடன்
 நட்டமே இல்லா நடுநிசி வித்ருடன்
சட்டமாய்க்  கூறும் சகாத்தின் கொடையையும்
திட்டமிட்  டோதும் திருமறையின் நன்மையையும்
கட்டியே தந்ததைக் கொண்டுசேர் ரப்பிடம்!



அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
 "கவித்தீபம்”, “கவியன்பன்” கலாம்
அதிராம்பட்டினம்  ( பாடசாலை), 
அபுதபி               (தொழிற்சாலை)
வலைப்பூந் தோட்டம்
http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)

அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844/ 055 7956007
மின்னஞ்சல்kalaamkathir7@gmail.com , kalamkader2@gmail.com

1 கருத்துகள் :

  1. இரமலான் நோன்பின் மகத்துவம் அறிய செய்தீர் ஆசானே . அருமை .

    பதிலளிநீக்கு