செவ்வாய், 9 ஜூன், 2015

அமரர் பி.எஸ்.ஏ காக்கா அவர்களுக்கான இரங்கற்பா


ஆயிர மாயிரம் பேர்கள்
    ஆதர வாயினர் உம்மால்
தாயினைப் போலவே அன்பால்
    தாங்கியே சென்றவுன் பண்பால்
வாயிலில் வந்தது செல்வம்
    வாழ்வினைப் பெற்றனர் எங்கும்
நோயினால் சென்றதுன் மெய்தான்
    நொடியினில் துன்பமும் பெற்றே!



காலமும் நேரமும் வந்தால்
      காத்திருக் காமலே செல்லும்
கோலமும் உண்டென உண்மை
      கோள்களை ஆள்பவன் செய்தான்
பாலமாய் நின்றவுன் பாதை
       பற்றியே செல்வது எங்கள்
வேலையாய் ஆனது என்பேன்
   வேதனை மனத்தினில் நின்றே!



பேறுடன் சென்றது மெய்யே
     பேறுகள் உண்டென கண்டேன்
ஆறுதல் சொல்வது உன்றன்
    ஆருயிர் சொர்க்கமும் காண
மாறுதல் தானென நம்பி
    மாறிடும் துன்பமும் மெல்ல
வேறிடம் மாற்றிய தேவன்
    வெற்றியைக் காட்டுவான் ஆங்கே!






-- யாத்தனுப்பியவர்: அதிரை கவியன்பன் கலாம், அபுதபி

1 கருத்துகள் :

  1. காலமும் நேரமும் வந்தால்
    காத்திருக் காமலே செல்லும்
    கோலமும் உண்டென உண்மை
    கோள்களை ஆள்பவன் செய்தான். முற்றிலும் உண்மை . தமிழ் கூறும் நல்லுலகம் வாழும் வரை கவியே நீயும் வாழ்வாய் புகழுடன் .

    பதிலளிநீக்கு