சனி, 3 அக்டோபர், 2015

இடிதரும் ஓசையாய் இன்னலுங் கண்டு
துடித்துநீ தோல்வியால் துவண்டு விடாமல் 
பிடிப்புடன்  துணிவைப் பெரிதெனப் போற்றியே!

சோம்பல் என்பது தோல்வியின் திறப்பு
சாம்பல் போர்வை துறந்துத் தீப்பற்று
வேம்பாய்க் கசக்கும் வெற்றி உனதே!

ஊதும் சங்குதான் ஊரையும் எழுப்பும்
ஓதும் உன்னால் உலகமே விழிக்கும்
தீதும் தராத திறன்தரும் கல்வியே!


-அதிரை கவியருவி கவியன்பன் கலாம், அபுதாபி

0 கருத்துகள் :

கருத்துரையிடுக