முந்தியப் பருவம் முதலணு வளர்ச்சி
பந்துபோ லுருண்டுப் பருவங்கள் ஓடி
வந்திடும் முதுமை வாழ்வின் இறுதியே!
இளமையின் வேட்கையில் எங்கோ அலைந்தாய்
உளமதில் பருவம் உணர்த்திடும வேளை
களமதில் நீங்கியது காலமெனும் பருவமே!
அறுவடைப் பருவம் அதற்குள் விதைத்திடு
மறுமுறை வராமல் மரணமும் தடுக்கும்
நெறிமுறை பேணுக நிம்மதி மறுமையே!
-அதிரை கவியருவி கவியன்பன் கலாம், அபுதாபி.
0 கருத்துகள் :
கருத்துரையிடுக