வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

ந்தப் பாடல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டிற்காக அடியேன் யாத்தளித்தேன்; இதனைத் தேனிசைச் தென்றல் தேரிழந்தூர் தாஜூதீன் அவர்கள் மேடையில் பாட உள்ளார்கள்: உனக்குப் பிடித்ததுக் குடிப்பதற்குப் புளியாணம்; இதோ படிப்பதற்கு என் கவியாணம்:


அழைக்கின்றார் உன்னைத்தான் தம்பீ வாநீ
அவர்தானே காதிர்முஹைதீன் அரசியல் ஞானி
உழைக்கின்றார் நாளெல்லாம் இந்த ஏணி
உம்மத்தைக் கரைசேர்க்கும் புனிதத் தோணி
விழைகின்றார் கூட்டணியில் பலத்தைக் காட்ட
விரைந்திடுக மாநாட்டின் வெற்றி கூட்ட
தழைக்கட்டும் பிறைக்கொடியின் பசுமை எங்கும்
தன்னேரில்லாத் தலைவரின் மனத்தில் தங்கும்

முஸ்லீம்கள் ஒன்றுபடத் தலைவர் நாட்டம்
முஹல்லாவின் ஜமாஅத்தை மதிக்கும் கூட்டம்
இஸ்லாத்தின் அரசியலே இவரின் நோக்கம்
இஸ்மாயீல் சாஹிபாகச் செயலில் வேகம்
விசுவாசம் கொண்டமனம் இவரை நாடும்
விரைந்திங்கு ஒன்றுபட்டால் வெற்றி யாகும்
நசுங்கிவிட்ட உம்மத்தை நிமிர்த்தும் தொண்டாம்
நல்லவராம் இவர்கரத்தைப் பற்றிக் கொண்டே!


பாடலாசிரியர்: அதிரை கவியன்பன்கலாம்,அபுதாபி

0 கருத்துகள் :

கருத்துரையிடுக