சனி, 11 ஜனவரி, 2020


தோல்வி கண்டு துவளுகின்ற 
தோழா நீயும் மிரளுவதேன் 
ஆல்போ லுள்ள துணிவுடனே 
ஆழ மெண்ணம் பதிந்திடுவோம் 
வேல்போல் கூர்மை அறிவுடனே 
வேகம் காட்டி முயலுவதும் 
நூல்கள் யாவும் பயிலுவதும் 
நுட்பக் கல்வித் தெளிவதுமே 

வேலை இல்லை; திகைத்தலின்றி 
வேலை ஒன்றைத் துவங்கிடுவோம் 
காலை மாலை உழைத்திடுவோம் 
காலம் தன்னை மதித்திடுவோம் 
*பாலை நீராய்க்* கருத்திலிடு 
பாழாக் காதப் பயிற்சியெடு 
சோலை யாகச் செழித்திடுமே 
சோம்பல் போர்வை ஒழித்திடவே 



குறிப்பு: *பாலை நீராய்= பாலைவனத்தில் கிட்டும்தண்ணீர் போல் கருதி வாழ்வைப் பாழாக்காதுவாழ்தல் 



“கவியன்பன்” கலாம், 


0 கருத்துகள் :

கருத்துரையிடுக